எரிபொருள் பாவனையாளர்களே! பதிவுசெய்து கொள்ளுங்கள்!
பதிவு செய்யும் நடவடிக்கை
எரிபொருள் பாவனையாளர்கள், தமக்குரிய எரிபொருள் தொகை தொடர்பில், தமது பிரதேசத்திற்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதிவு செய்து கொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன் அடிப்படையில் பதிவு செய்து கொள்ளும் ஒவ்வொரு நுகர்வோருக்கும் மாதாந்த எரிபொருள் தேவையை அதிகாரிகள் நிர்ணயம் செய்து, அதற்குரிய தொகையை வழங்கக்கூடியதாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
கூப்பன் முறை
இந்தநிலையில் எதிர்காலத்தில் போக்குவரத்து மற்றும் கைத்தொழில் துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் எரிபொருள் விநியோகத்திற்கான கூப்பன் சீட்டு முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எரிபொருளை வழங்கும், ஒவ்வொரு இலங்கை போக்குவரத்து சாலைக்கும் தனியார் பேரூந்து சங்கத்தின் பிரதிநிதி ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தொடா்புச் செய்தி
தனியார் எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி : கஞ்சன விஜேசேகர



