பாவனையாளர் அதிகார சபை வர்த்தகர்களுக்கு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
வர்த்தகர்கள் பாவனையாளர்களுக்கு சாதாரண விலையில் பொருட்களை வழங்கவில்லை என்றால் பாவனையாளர் அதிகார சபை கடும் சட்ட நடவடிக்கை எடுக்கும் என பாவனையாளர் அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சில வர்த்தகர்கள் பொருட்களை கூடிய விலையில் விற்று இலாபம் ஈட்ட முயற்சிப்பதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.

கடுமையாக்கப்பட்டுள்ள சட்டங்கள்
நாடு முகம்கொடுத்த பாரிய அனர்த்தத்தில் பொது மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருந்து மீள்வதற்கு உங்களால் முடிந்த உதவியை செய்யவும்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் சட்டத்திட்டங்களின் படி அவசரகால நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளதால் பாவனையாளர் அதிகார சபை என்ற வகையில் எமக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதால், நாம் அந்த அதிகாரங்களை பிரயோகிக்க தயங்க மாட்டோம்.
அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் பாதிக்கப்படாத மக்களுக்கு சாதாரண விலையில் பொருட்களை வழங்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.எங்களுக்கு முறைப்பாடுகள் ஏதும் கிடைத்தால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பாவனையாளர் அதிகார சபையின் மாவட்ட அதிகாரிகள் வர்த்தக நிலையங்களில் தேடுதல் செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளனர்.