கிளிநொச்சியில் உடைந்து விழுந்த பாலத்தின் கட்டுமானப்பணிகள் மீள ஆரம்பம்
கிளிநொச்சி (Kilinochchi) கரைச்சி பிரதேச சபையினால் நிர்மாணிக்கப்பட்டு ஓராண்டுக்குள் உடைந்து விழுந்த பாலத்தின் கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது
கிளிநொச்சி பாரதிபுரம் கிருஷ்ணபுரம் மலையாள புரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் பிரதான வீதியான செபஸ்தியார் வீதியில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் கரைச்சி பிரதேச சபையினால் குறித்த பாலம் அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
துரித நடவடிக்கைகள்
இந்தநிலையில் பாலம் உடைந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்தததுடன் மக்கள் போக்குவரத்து செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டது.

இதனையடுத்து மாவட்ட ஒருங்கிணைப்பு குழு எடுத்த துரித நடவடிக்கைகள் காரணமாக கரைச்சி பாரதிபுரம், செபஸ்தியார் புரம் வீதி பாலத்தின் கட்டுமான பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சமஷ்டியை ஏற்கும் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்: வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்பு குழு வலியுறுத்து
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 13 மணி நேரம் முன்
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam