வவுனியா நகர மத்தியில் கட்சித் தலைவர்களுக்கு சிலை கட்டுமான பணிகள் ஆரம்பம் (photo)
வவுனியா நகர மத்தியில் தந்தை செல்வாவின் சிலைக்கு அருகாமையில் இரண்டு கட்சி தலைவர்களுக்கு சிலை வைப்பதற்கான கட்டுமான பணிகள் இடம்பெற்று வருகின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இரவோடு இரவாக அமைக்கப்பட்ட குறித்த கட்டுமானப்பணி தொடர்பில் வவுனியா நகரசபை தலைவரிடம் எமது பிராந்திய செய்தியாளர் கேட்டபோது, ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் பத்மநாபா மற்றும் புளொட் அமைப்பின் தலைவர் உமாமகேஸ்வரனுக்கு சிலை வைப்பதற்காக குறித்த இடத்தில் கட்டுமானமொன்று அமைக்கப்படுவதாக தெரிவித்ததுடன் அதற்கான அனுமதி வட மாகாண ஆளுனரிடம் பெறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தந்தை செல்வாவின் சிலை அனுமதி பெறப்பட்டா கட்டப்பட்டது என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
நகரசபையின் அனுமதி
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடமும் எமது பிராந்திய செய்தியாளர் கேட்டபோது, பத்மநாபாவின் சிலை குறித்த இடத்தில் வைக்கப்படவுள்ளது என தெரிவித்ததுடன் அதற்கான நகரசபை அனுமதி 5 மாதங்களுக்கு முன்பே பெறப்பட்டதாகவும் வட மாகாண ஆளுனர் உள்ளூராட்சி மன்ற அனுமதி மாத்திரம் போதுமானது என தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், இவ்விடயம் தொடர்பாக பல நகரசபை உறுப்பினர்களுக்கு இவ்விடயம் தெரியாது
என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam
