திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் இரண்டு வீடுகள் நிர்மாணிப்பு
திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற மேலும் இரு குடும்பங்களுக்கு நிரந்தர வீடு நிர்மாணிப்புக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்தநிகழ்வானது நேற்று முன்தினம் (2) மன்றத்தின் தலைவர் எம். ரீ. எம். பாரிஸ் தலைமையில் நடைபெற்றுள்ளது.
திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் வறுமை கோட்டின் கீழ் வாழுகின்ற நிரந்தர வீடுகள் அற்ற குடும்பங்களுக்கு பாதுகாப்பானதும் நிலையுறுதியுமான நிரந்தர வீடுகளை நிர்மாணிக்கும் வாழ்வதற்கான தங்குமிடம் எனும் திட்டத்தின் கீழ் மேற்படி இரு வீடுகளும் நிர்மாணிக்கப்படவுள்ளது.
வீடுகள் நிர்மாணிப்பு
இந்த வீட்டுத்திட்டத்திற்கு அவுஸ்ரேலியாவில் வசித்து வரும் பிரபல சமூக ஆர்வளர் திரு. குணரத்ணம் கந்தக்குமார் மற்றும் திருமதி பிரமிளா ஆனந்தகுமார் ஆகிய இருவரும் நிதி அனுசரணை வழங்கினர்.

குறித்த இரு வீடுகளும் திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள சல்லிக் கிராமத்திலும் விளாங்குளக் கிராமத்திலும் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






கொழும்பில் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து - சிக்கிய 20க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் - வெளியான காரணம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பின்னணியில் மறைந்துள்ள முக்கிய சூத்திரதாரிகள் உள்ளிட்ட சதியாளர்களின் பட்டியல்
அடுத்த 24 மணி நேரத்திற்குள் தீவிரமடையும் வானிலை: பல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட லட்சுமி ப்ரியா... காரணம் என்ன, ஷாக்கில் ரசிகர்கள் Cineulagam
ரஜினி சார் மீது இருக்கும் மரியாதைக்காக ஒதுங்குகிறேன்.. தனுஷ் ஓம் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு Cineulagam