அரசாங்கத்துக்குள் மக்கள் அறியாத பெரும் சதித்திட்டங்கள்! மொட்டுக்கட்சி வெளிப்படை
மக்களுக்கு தெரியவராத பல சதித் திட்டங்கள் அரசாங்கத்தின் உள்ளே நடந்து வருவதாக மொட்டுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சன்ஜீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
குறித்த திட்டங்கள் தற்போது வெளித் தோற்றத்திற்கு தெரியவில்லை என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சன்ஜீவ எதிரிமான்ன நேற்று கொழும்பில் நடந்த நிகழ்வொன்றில் இதனை தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி
இதன்போது, அவர் மேலும் கூறியதாவது,
“மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தேசிய மக்கள் சக்தியை (NPP)யை புறந்தள்ளிவிட்ட நாட்டில் பெரும்பான்மையான ஒரு அரசியல் இயக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையில் செயற்படுகிறது.
நாட்டில் நடக்கும் சில நிகழ்வுகளை வைத்து நோக்கினால் அரசாங்கத்தில் உள்வீட்டு சலசலப்புகள் அதிகம் இருப்பதாகவும் அவை காலம் செல்ல செல்ல மெதுவாக வெளிவரும்.
ஜனாதிபதியின் முகம் பொலிவிழந்து காணப்படுகிறது. எதிரக்கட்சியில் இருக்கும் போதிருந்த உட்சாகம் குறைந்து விட்டது. சிறிது காலத்தில் அரசாங்கம் கவிழ்ந்து விடும்” என கூறியுள்ளார்.



