பொதுநலவாய பளுதூக்கல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா(Photos)
பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான பளுதூக்கல் போட்டியில் பங்குபற்றி வெற்றிவாகை சூடியுள்ள மாணவியையும், பயிற்றுவிப்பாளரையும் கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம்(17.07.2023) இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வு மாணவியின் முயற்சியையும், முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு அவரை பாராட்டும் விதமாக பளுதூக்கல் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவியின் திறமை
2023ம் ஆண்டிற்கான அகில உலக பளுதூக்கல் போட்டிக்காக இலங்கையின் வடமாகாணத்திலிருந்து 40கிலோ எடை பிரிவில் 16 வயதையொட்டிய வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவி கோசியா திருமேனன் தெரிவாகி ஜீலை மாதம் 12 தொடக்கம் 16 ஆம் திகதிவரை டெல்லியில் நடைபெற்ற போட்டியில் பங்கெடுத்திருந்தார்.
இந்த மாணவி முதல் முறையாக வவுனியாவில் இருந்து பளுதூக்கல் போட்டிக்காக சென்றுள்ளார்.
மேலும், இப் போட்டியில் மூன்றாம் இடத்தினை பிடித்து வெண்கல பதக்கத்தினை குறித்த மாணவி பெற்றுள்ளமையும் குறிப்பி்டத்தக்கது.
பத்தினியார் மகிழங்குளம் கிராம அபிவிருத்தி சங்க தலைவரின் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் பத்தினியார் மகிழங்குள கிராமத்தின் சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |











ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

நடந்துசெல்லும் போது திடீரென மயங்கி விழுந்த பிக் பாஸ் போட்டியாளர்.. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி Cineulagam
