உலக வாழ் தமிழ் மக்களுக்கு கனேடிய அமைச்சர் மார்சி ஐயனின் தைப்பொங்கல் வாழ்த்து செய்தி
நன்றியை பறைசாற்றும் தைப் பொங்கல் திருநாள் இன்று மலர்ந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக மலர்ந்திருக்கும் இந்நாளில் தைப்பொங்கல் பண்டிகை நாடளாவிய ரீதியில் தமிழ் மக்களால் கொண்டாடப்படுகிறது.
பல்வேறு அரச தலைவர்கள் முக்கியஸ்தர்கள் என பலர் தமது தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், கனேடிய அமைச்சர் மார்சி ஐயன் (Marci Ien) உலக வாழ் தமிழர்களுக்கு தனது பொங்கல் வாழ்த்தினைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
கனடா மற்றும் உலகெங்கிலும் உள்ள தமிழ் சமூகம் தைப் பொங்கல் திருநாளை இன்று கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஜனவரி மாதம் கனடாவில் தமிழ் பாரம்பரிய மாதமாகவும் குறிக்கப்படுகிறது. இந்த மாதம், சிறந்த, நேர்மையான, மேலும் அனைவரையும் உள்ளடக்கிய நாட்டைக் கட்டியெழுப்ப தமிழ் கனடியர்களின் பங்களிப்புகளை நாங்கள் அங்கீகரிக்கின்றோம்.
தைப் பொங்கல் திருநாளைக் கொண்டாட தமிழ்ச் சகோதரர்களுடன் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இந்தச் சிறப்புத் திருவிழா தமிழ்ப் பண்பாட்டின் சிறப்பை வெளிப்படுத்துகின்றது. இனிய தைப்பொங்கள் நல்நாள் வாழ்த்துக்கள் என்றும் தமது வாழ்த்தினை பகிர்ந்துக்கொண்டுள்ளார்.