மட்டக்களப்பில் பட்டாசுகள் வெடித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்த ஆதரவாளர்கள் (Video)
இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதை நாடளாவிய ரீதியில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் ஆரவாரம்செய்து கொண்டாடி வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு நகரில் இன்று(13) பட்டாசுகள் வெடிக்கவைத்து ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் லிங்கேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் திருமதி சசிகலா, சிவலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையிலான பதாகைகளும் தொங்கவிடப்பட்டதுடன் பட்டாசுகளும் வெடிக்கவைக்கப்பட்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்யப்பட்டது.
இன்று காலை சுபநேரத்தில் பிரதமர் தனது கடமைகளை பொறுப்பேற்ற வேளையில் இந்த மகிழ்ச்சி கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan
