மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம் - கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் நெரிசல் தற்போது குறைந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலகா தெரிவித்துள்ளார்.
நேற்று கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு வந்த அனைத்து பயணிகளுக்கும் தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சுற்றுலாப் பயணிகளின் விசாக்களை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
விமானங்கள் அவசரமாக தரையிறங்க அனுமதி
மத்திய கிழக்கு நோக்கி செல்லும் விமானங்கள் அவசரமாக தரையிறங்க அனுமதி கோரினால், கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்கள் அவற்றை ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளன.

அதற்கமைய, விமானப்படையின் உதவியை நாடுவதாகவும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
விமான நிலையங்கள் மூடப்பட்ட நாடுகளில் உள்ள விமான நிலையங்களுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்பு விமான நிறுவனம் அல்லது அதன் பிரதிநிதிகளை தொடர்பு கொண்டு சரியான நிலைமைகளைப் பற்றி அறிந்துகொண்டு விமான நிலையத்திற்கு வருமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இது விமான நிலையத்தில் தேவையற்ற நெரிசலைக் குறைக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri