வவுனியாவில் சஜித்தின் பிரசார கூட்டத்தில் குழப்பம் : ஊடகவியலாளர்களுடனும் முரண்பாடு
வவுனியாவில் நடைபெற்ற சஜித்தின் பிரசார கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டதுடன் ஊடகவியலாளர்களுடனும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
வவுனியாவில் நேற்றுமுன் தினம்(03.09.2024) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் பிரசார கூட்டம் இடம்பெற்றது.
பிரசுரிக்கப்பட்ட செய்தி
இதன்போது அங்கு முன்னால் அமைச்சர் ரிசாட் பதியுத்தீனுக்கு ஆதரவாக வந்திருந்த பொதுமக்கள் சிலருக்கு தண்ணீர் போத்தல்கள் வழங்கப்படவில்லை என்றும் அழைத்து வந்தவர்கள் தமக்கு இனம் சார்ந்து செயல்படுகிறார்கள் என குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.
இதேவேளை குறித்த முரண்பாட்டை காணொளியாக்கிக்கொண்டிருந்த ஊடகவியலாளர்களை அதனை எடுக்க வேண்டாம் என்று சிலர் தடுத்து இருந்ததுடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுத்தீன் தொடர்பாக பிரசுரிக்கப்பட்ட செய்தியை உதாரணம் காட்டி குறித்த செய்தியை ஏன் பிரசுரித்தீர்கள் என்றும் கேள்வி எழுப்பி ஊடகவியலாளர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டனர்.
இதன் போது ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட பிரதான அமைப்பாளர் ரசிக்கா அவர்கள் தலையிட்டு நிலைமையை சுமுகமாக்கி இருந்தார்.
ஊடகவியலாளர்களுடன் முரண்பட்டவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவபடுத்தும் ஆடைகளை அணிந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 12 மணி நேரம் முன்

பாரிய முதலீடுகளால் இன்னொரு ஏழை நாட்டிற்கு வலை விரித்த சீனா... முதற்கட்டமாக ரூ 3,000 கோடி News Lankasri

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri
