கதிர்காம கந்தனின் ஆடிவேல் திருவிழாவில் குழப்பம் - மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் கண்டனம்
மட்டக்களப்பு ஈபிடிபி அமைப்பாளரால், மாநகரசபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அன்னதானச் செயற்பாடு தொடர்பில் உண்மைக்குப் புறம்பான கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் மாநகரசபைக்கும் அதன் முதல்வருக்கும் களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கியநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று(20.07.2026) மட்டக்களப்பு மாநகரசபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கதிர்காம கந்தனின் ஆடிவேல் திருவிழா
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கதிர்காம கந்தனின் ஆடிவேல் திருவிழாவை முன்னிட்டு, பாத யாத்திரை செய்யும் அடியார்களின் நலன்கருதி, மட்டக்களப்பு மாநகர சபை பாத யாத்திரீயர்களுக்கு அன்னதானம் கொடுக்கும் பணியினை கடந்த ஐந்து வருடங்களாக தொடர்ச்சியாக செய்து கொண்டு வருகிறோம்.
இந்த அன்னதான பணியினை ஒவ்வொருவருடைய அனுசரணையோடு, மாநகர சபையும் ஒரு அனுசரணையையும் வழங்கி, ஒரு அன்னதான குழுவினரால் இந்த பணி செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

கடந்த 2020ஆம் ஆண்டு எமது மாநகர சபையின் ஆட்சிக் காலத்திலேயே, அப்போது இருந்த முதல்வர் தியாகராஜா சரவணபவன், ஆணையாளர் மதிவண்ணன் இருவரும் இணைந்து இந்தப் பணியை ஆரம்பித்தார்கள்.
தொடர் விமர்சனம்
அதன் தொடர்ச்சியாக இந்த வருடமும் நாங்கள் இந்தப் பணிக்கான சேவைகளை கடந்த 8ஆம் திகதி ஆரம்பித்திருந்தோம். அன்று இந்தப் பணிக்காக எமது மாநகர சபை வளாகத்திலிருந்து அண்மையிலே மாநகர சபைக்கு கொள்வனவு செய்யப்பட்ட, சுமாராக இரண்டே முக்கால் கோடி ரூபாய் செலவிலே நான்கு உழவு இயந்திரங்கள் புதிதாக கொள்வனவு செய்திருந்தோம்.
அந்த உழவு இயந்திரத்திலே புதிய உழவு இயந்திரங்கள் இரண்டையும், ஏனைய வேலைப் பகுதிக்குரிய உழவு இயந்திரங்களும், அதற்குரிய அந்த பெட்டியையும் சேர்த்து மொத்தமாக நான்கு உழவு இயந்திரங்களும், அன்னதான பணிக்கனா சமையல் செய்யும் பொருட்களும் கொள்வனவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களிலே மட்டக்களப்பு மாவட்ட ஈ.பி.டி.பி யின் அமைப்பாளர் ராஜ்குமார், உழவு இயந்திரம் மற்றும் சமையல் பொருட்கள் தொடர்பில் மோசமான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.
இதுபோன்ற விமர்சனங்களை முன்வைத்த குற்றச்சாட்டுக்காக அவர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த விவகாரம் தொடர்புடைய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்.