பெரஹராவின் போது குழப்பமடைந்த யானை! பதறியடித்து ஓடிய மக்கள்
பதுளை நகரில் நடைபெற்ற மிஹிது பெரஹராவின் போது, ஒரு யானை குழப்பமடைந்தமையால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பதுளை நகரில் நேற்று (10) இரவு நடைபெற்ற பெரஹராவின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இருப்பினும், சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
குழப்பமடைந்த யானை
பதுளை கைலகொட மிஹிது பெரஹரா நேற்று இரவு பதுளை நகர வீதிகளில் 85 ஆவது முறையாக இடம்பெற்றது.
இந்த பெரஹரா ஆண்டுதோறும் பதுளை, சத்தர்மானந்த பிரிவேனா அமைப்பால் ஏற்பாடு செய்யப்படுகிறது.
யானைகள், நடனங்கள் உள்ளிட்ட பல அம்சங்களுடன் நேற்று இரவு பெரஹரா நடைபெற்றது.
இருப்பினும், இந்த நேரத்தில், கலசத்தை சுமந்து செல்லும் யானை குழப்பமடைந்தமையால் பெரஹராவின் போது பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
எனினும் யானையை சிறிது நேரத்திற்குள் யானைப் பாகன் அமைதிப்படுத்திய பிறகு, பெரஹரா மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
[MASEVM4 ]



