உள்ளூராட்சி சபைகளிலுள்ள முரண்படக் கூடிய விடயங்களை இணக்கப்பாட்டுடன் பேசித் தீர்க்க வேண்டும் :இரா.துரைரெத்தினம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைகளில் மிகவும் சிறப்பாக ஊழலற்ற முறையில் செயற்பட்டு வருகின்ற மக்கள் சேவகர்களுக்கும், அரசநிருவாகத்திற்கும், இடையிலான கொள்கை ரீதியான முரண்பாடு தனிநபர் ரீதியான முரண்பாட்டைக் கொண்டுவரக் கூடாது என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், ஈ.பி.ஆர்.எல்.எப், பத்மநாபா மன்றம், இரா.துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்றையதினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
மாவட்டத்திலுள்ள பல உள்ளூராட்சி சபைகளில் நடந்து வருகின்ற செயற்பாடுகள் முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும் கொள்கை ரீதியான செயற்பாடுகள் தொடர்பான திட்டங்கள்,முரண்பாடுகள் தனிநபர் ரீதியாகவும்,பொதுவாகவும், கொள்கைரீதியாகவும் வருவதற்கான வாய்ப்புகள் கூட உள்ளன.
என்ன நடக்கின்றதோ, இல்லையோ உள்ளூராட்சி சபைகளினால் சமூகம் வளர்ச்சி கண்டுள்ளது. இந்த வளர்ச்சி ஆரோக்கியமானது. பல உள்ளூராட்சி சபைகளில் அரச சேவையும்,மக்கள் சேவையும் இணைந்து செயற்பட்டு வருகின்றன. அதிலும் ஊழலற்ற முறையில் நல்ல திட்டங்களுடன் சிறப்பாக செயற்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
உள்ளூராட்சி சபைகளைப் பொறுத்தவரையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் ஆட்சி அமைப்பதற்கு தனியொரு கட்சி ஆட்சி அமைக்க முடியா விட்டாலும் ஏனைய கட்சிகளையும் இணைத்து ஆட்சி அமைக்கப்பட்டுள்ளன.
இவ் ஆட்சி அமைப்பு என்பது பலமொழி,பலமதம்,பலஇனங்களை,பல கட்சிகளை உள்ளடக்கியே பன்முகத்தன்மை கொண்டதாக ஆட்சி அமைத்து செயற்பட்டு வருகின்றன.
இருபது வட்டாரங்கள் அதில் 17 வட்டாரங்களில் வெற்றி அடைந்தும் கூட தனியே ஆட்சி அமைக்க முடியாமல் உள்ளூராட்சி சபையில் பொறிமுறை உள்ளது கவலைக்குரிய விடயமாகும். தனியொரு உறுப்பினர் ஒரு அமைப்பில் தெரிவு செய்யப்பட்டு தவிசாளராக வருகின்றளவிற்கு பொறிமுறைகள் வழிவகுத்துள்ளது.
உள்ளூராட்சி அமைப்பு முறையே முரண்பாடான ஒரு முறைக்கு வழிவகுக்கும்.
இது சரியா, பிழையா என விவாதிக்க வேண்டிய பல விடயம் இதேபோல மக்கள் சேவையாளர்களுக்கும் குறிப்பாக, மட்டக்களப்பு மாநகரசபையைப் பொறுத்தவரையில் புதிய ஆணையாளர் தெரிவு செய்யப்பட முன் முன்பும்,பின்பும் என்னும் கேள்வியை எமக்குள் கேட்டுக் கொண்டால் மக்களுக்கு எது நன்மை, அரசசேவைக்கு எது நன்மை,மக்கள் சேவகர்களுக்கு எது நன்மை என்னும் கேள்வி தொக்கி நிற்கின்றன.
எனவே அனைவரினதும் இலக்கு மக்கள் சேவையாகும். இதை புரிந்து கொண்டு செயற்பட முனைப்பு காட்டாத பட்சத்தில் குழப்பவாதிகளுக்கும், மோசடிக் காரர்களுக்கும், இனவாதிகளுக்கும் செயற்படுவதற்கு வித்திட்டவர்களாக நாங்கள் மாறுவோம்.
எனவே விட்டுக் கொடுத்து இணக்கப்பாட்டுடன் பேசி ஒரு சுமூகமான முறையை கொண்டு செல்வதற்கு மக்கள் நலனுக்காக வழிவகுப்பீர்கள் என நம்புகின்றேன் என்று கூறியுள்ளார்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
