இலங்கை அரசுக்குள் வெடிக்கவுள்ள பாரிய மோதல்! பிரபல ஜோதிடர் வெளியிட்டுள்ள கணிப்பு
இம்மாதம் 4 ஆம் திகதி நிகழ்ந்த சூரிய கிரகணத்தினால் இலங்கை அரசுக்குள் பாரிய நெருக்கடி ஏற்படுமெனவும்,அமைச்சர்கள் மீதான பொது மக்களின் அதிருப்தி அதிகரிக்கும் எனவும் பிரபல ஜோதிடர் கல்யாணி ஹேரத் மெனிகே தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் ஜாதகம் கும்பம் என்றழைக்கப்படும்.கும்பம் இலங்கையின் அடையாளம் ஆகும்.இலங்கை ஜாதகத்தின் இந்த கிரகம் 10 ஆம் வீட்டில் நடைபெறுகின்றது.
10 ஆம் இடம் நாட்டின் தற்போதைய அரசை குறிவைக்கின்றது.தோஜா குணமும்,அக்னியுடன் கொண்ட ராகு 4ல் விருச்சிக ராசியில் இருக்கின்றார்.10 ஆம் இடத்தை அரசு குறிக்கின்றது.
இதன் காரணமாக இலங்கை அரசிற்குள் கடும் நெருக்கடி நிலவும் எனவும் ‘தெய்வஞான காமதேனுவ’ எனும் பழைய புத்தகமான ஜோதிட நூலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கணித்து கூறியுள்ளார்.
அதாவது அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகள் மோதிக்கொள்வார்களென்றும்,நாட்டிற்கு முக்கியமான வர்த்தக சக்தி வாய்ந்த மையங்கள் இலங்கையின் சரிவுக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியின் மீதான மக்களின் எதிர்பார்ப்புக்கள் குறைந்து வருகின்றமையினால் இவை அரசு கவிழ்வதற்கு காரணமாக அமையுமென்றும் கூறப்படுகின்றது.
தற்போது அரசு தனது பலத்தினை இழந்து வருகின்றதனால் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடரும் எனவும்,நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள் மோதல் வெடிக்கும் எனவும், பழைய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஜோதிடர் கணித்து கூறியுள்ளார்.
மேலும் தற்போது நாட்டில் பிரச்சினையாக மாறியுள்ள எரிப்பொருள் பற்றாக்குறை தொடரும் எனவும்,இதன் காரணமாக அரசு பல சரிவுகளை சந்திக்க வேண்டி வருமெனவும் தெரிவித்துள்ளார்.

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
