அரசாங்க நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் அமைச்சர்களுக்கும் இடையில் முரண்பாடு
அரசாங்க நிறுவனங்களின் பிரதானிகளுக்கும்,அமைச்சர்களுக்கும் இடையில் கடுமையான முரண்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது.
அரசாங்க திணைக்களங்கள், சபைகள் என்பனவற்றுக்கு நியமிக்கப்பட்டுள்ள தலைவர்கள், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் தொடர்பில் அமைச்சர்கள் அரசாங்கத்தின் உயர் மட்டத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
சில அமைச்சர்கள் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளதுடன், தங்களது அதிருப்தியையும் வெளியிட்டுள்ளனர்.
தமது உத்தரவுகளை இந்த அதிகாரிகள் மதிப்பதில்லை என அமைச்சர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
சில இடங்களில் அமைச்சர்களுக்கும் நிறுவனப் பிரதானிகளுக்கும் இடையில் முரண்பாடாக மாறியுள்ளது எனவும்,இது நிறுவனங்களை நடாத்திச் செல்வதற்கு முடியாத நிலைமையாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிறுவனப் பிரதானிகள் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர்கள், அரசாங்கத்தின் உயர் மட்டத்தினரிடம் கோரியுள்ளனர்.
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri