குடு அஞ்சுவின் பல மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துகள் பறிமுதல்!
வெளிநாடுகளில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பாதாள உலக உறுப்பினராக கருதப்படும் 'குடு அஞ்சு' என்பவரின் சொத்துக்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (21) பறிமுதல் செய்துள்ளனர்.
இரத்மலானை - மொரட்டுமுல்ல பிரதேசத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் சட்டவிரோத சொத்துக்கள் அல்லது சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவினரால் இவ்வாறு சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு வீடுகள், ஒரு கையிருப்பு தங்கம், சிறிய லொறி, முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சொத்தின் பெறுமதி சுமார் 30 மில்லியன் ரூபாவுக்கும் மேல் எனவும், “கூடு அஞ்சு” என்பவரின் மனைவியின் பெயரில் சொத்துக்கள் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் 2018ம் ஆண்டுக்கு பின்னர் போதைப்பொருள் வர்த்தகத்தில் சம்பாதித்த பணத்தை பயன்படுத்தி குறித்த சொத்துக்களை கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam
