மலையக மக்கள் முன்னணியின் மாநாடு: இராதாகிருஷ்ணன் எம்.பி. வெளியிட்ட தகவல்
மலையக மக்கள் முன்னணியின் தேசிய மாநாடும் 35ஆவது ஆண்டு நிறைவு விழாவும் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அக் கட்சியின் தலைவர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
குறித்த தீர்மானம் கட்சியில் நடைபெற்ற கூட்டத்தின் போது எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மலையக மக்கள் முன்னணி 1989ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரனால் ஸ்தாபிக்கப்பட்டது.
கட்சியின் வரலாறு
மலையகத் தேசியம் மற்றும் உரிமை அரசியலுக்காக ஆரம்பிக்கப்பட்ட மலையக மக்கள் முன்னணியை ஆரம்பத்திலேயே ஓரம் கட்டுவதற்காக பலரும் செயற்பட்டு வந்துள்ளார்கள்.
இந்நிலையில், தனது விடாமுயற்சியின் பயனாகவும் அன்று அவருடன் இணைந்திருந்த இளைஞர்களின் துடிப்பான செயற்பாடுகளாலும் மலையகத்தின் ஒரு மாற்றுக் கட்சியாக மலையக மக்கள் முன்னணி உருவெடுத்தது.
யாரும் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு வளர்ச்சியடைந்த மலையக மக்கள் முன்னணி இலங்கை அரசியல் வரலாற்றில் 1994ஆம் ஆண்டு ஓர் அரசைத் தீர்மானிக்கின்ற சக்தியாக அரசியலில் வளர்ந்தது.
"நான் தலைமைப் பொறுப்பை ஏற்ற பின்பு அமரர் சந்திரசேகரனின் வழியில் இந்தக் கட்சிக்கு தலைமை தாங்கி பல வெற்றிகளைப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது. எனவே, மலையக மக்கள் முன்னணிக்கென ஒரு சரித்திரம் இருக்கின்றது.
கட்சியின் மைல்கல்
கடந்த பல வருடங்களாக மாநாட்டை நடத்த முடியாத நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள மாநாட்டை மிகவும் சிறப்பாக முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என்று இராதாகிருஷ்ணன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த மாநட்டில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளில் இருந்தும் முக்கியஸ்தர்கள் பங்கெடுக்கவுள்ளனர். குறிப்பாக இந்தியாவின் தமிழ் நாட்டில் இருந்து மேடைப் பேச்சாளர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இதன்போது, மலையக மக்கள் முன்னணிக்காகவும் அதன் முன்னேற்றத்துக்காகவும் செயற்பட்டவர்களுடன் மலையகத்துக்குப் பெருமை சேர்த்தவர்களும் பலரும் கௌரவிக்கப்படவுள்ளனர்.
அத்துடன், இந்த மாநாடானது மலையக மக்கள் முன்னணிக்கு ஒரு மைல்கல்லாக அமையும் என்றும் இராதாகிருஷ்ணன் எம்.பி. கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
