குருநாகலில் பேருந்து விபத்தை தடுத்த நடத்துனர்: வழங்கப்பட்ட கௌரவம்
குருநாகலில் ஒரு பேருந்து விபத்தைத் தடுக்கவும், மாணவர்கள் குழுவின் உயிரைக் காப்பாற்றவும் தனது உயிரைப் பணயம் வைத்தமைக்காக, பாடசாலை போக்குவரத்துப் பேருந்தின் நடத்துனர் ஒருவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
மாணவிகளை ஏற்றிச் செல்லும் போது, பேருந்தின் ஓட்டுநர் திடீரென மாரடைப்பால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எனினும், குறித்த பேருந்தின் நடத்துனர் வாகனத்தைக் கட்டுப்படுத்தி, விபத்தைத் தடுத்து, பேருந்தில் இருந்த மாணவர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

செருப்பால் அடித்து துரத்தப்பட்ட அருண் சித்தார்த்.. விடுதலைப் புலிகள் தொடர்பான கருத்துக்கு கடும் கண்டனம்
வீரச் செயல்
ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டபோது, நடத்துனர் வாகனத்தை இடதுபுறமாகத் திருப்பி, ஒரு மின்சார கம்பத்தில் மோதச்செய்துள்ளார்.
அவர், இந்த செயற்பாட்டை மேற்கொள்ளாதிருந்தால், பேருந்து வலதுபுறத்தில் உள்ள பாரிய பள்ளத்தாக்கில் வீழ்ந்திருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்தநிலையில், குறித்த பாடசாலையின் மாணவர்களே, பேருந்து நடத்துனரின் வீரச் செயலுக்காக அவரைக் கௌரவிக்க முன்வந்ததாக பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |