மாவையின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள முக்கியஸ்தர்கள்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் (Mavai Senathirajah) மறைவிற்கு பலரும் தமது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், மாவை தமிழினத்தின் அரசியல் விடிவிற்காக இறுதிவரை போராடிய அரசியல் போராளி என தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் அரசுக் கட்சிக்கு பாரிய இழப்பு
அன்னாரின் இழப்பு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு பாரிய இழப்பாகும். அவரது மறைவால் துயருறும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலம் முழுவதையும் தமிழ் மக்களுக்காகவே செலவிட்ட ஒருவரை இன்று நாம் இழந்து நிற்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வெளியிட்டு்ள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், வடக்கு மாகாண மக்கள் சார்பாக, அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: அடுத்த 48 நாட்கள் என்ன நடக்கும்? டால்பின்களின் வரவேற்பு வீடியோ News Lankasri

Super Singer: பாதியில் பாடலை நிறுத்திய சிறுமி.... அதிருப்தியில் அரங்கம்! நடுவர்களின் முடிவு என்ன? Manithan

விஜய் டிவியின் நீ நான் காதல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபலம்... யார் அவர், வீடியோ பாருங்க Cineulagam
