தமிழினம் பெரும் பலத்தினை இழந்துள்ளது : இரங்கல் வெளியிட்ட முக்கியஸ்தர்கள்
புதிய இணைப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதுபெரும் தலைவரும், கடந்த அரை நூற்றாண்டாகத் திருகோணமலை மாவட்டத்தைப் பிரதிநித்துவப்படுத்தி செயற்பட்டவரும், இலங்கைத் தமிழர் இனச் சிக்கலுக்கு தீர்வுக்கான அயராது உழைத்து வந்தவருமான மாண்புமிகு இரா சம்பந்தன் ஐயா இயற்கை எய்திய செய்தி அறிந்து அதிர்ச்சியும் ஆழ்ந்தகவலையும் அடைகின்றோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர் க.ச.குகதாசன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது பிரிவால் வாடும் உறவினர் அனைவருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் சார்பில் இரங்கலையும் துயர் பகிர்வினையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளார்.
எமது தமிழினம் ஓர் பெரும் பலத்தினை இழந்த சூழலில் உள்ளது. சுமார் ஆறு தசாப்தங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கித் ஆற்றல்மிகு சக்தியாக தமிழ் மக்கள் மத்தியில் விளங்கிய ஓர் பண்புமிக்க அறிவாளனான இரா. சம்பந்தனை (R. Sampanthan) நாம் இழந்துள்ளோம் என இந்துக் குருமார் அமைப்பு தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
மேலுமு். இராஜதந்திர நகர்வுகளை செய்யும் சிறப்பாளர். பல்வேறு நாட்டு தலைவர்களாலும் இராஜதந்திரிகளாலும் மதிக்கப்பட்ட ஒருவர் சம்பந்தன்.
இறை பிரார்த்தனை
இவர் எமது தமிழ் பிரதிநிதிகளை ஓர் அணியாக செயற்பட வேண்டும் என செயற்பட்டவர்.
நிதானமாக நுண்ணறிவுடன் செயலாற்றிய, தலைமை தாங்கிய தலைவரை இழந்துள்ளோம்.
இச்சமயத்தில் அமரரது ஆத்ம சாந்திக்கு இந்துக் குருமார் அமைப்பின் சார்பில் செய்கிறோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தி - கஜிந்தன், தாஸ்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
