டெங்கு அச்சுறுத்தல்: திருநெல்வேலியில் தீவிர சோதனை!
டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் திருநெல்வேலி பகுதியில் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான குழுவினரால் தொடர்ச்சியாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் 03, 06, 08 ஆம் திகதிகளில் வளாக வீதி, கலாசாலை வீதி, பனிக்கர் வீதி பகுதிகளில் பா. சஞ்சீவனால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் வீட்டின் பல்வேறு இடங்களில் குடம்பிகள் காணப்பட்ட 09 வீட்டு உரிமையாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
வழக்கு விசாரணை
அவர்களிற்கெதிராக நேற்று 18.08.2026ம் திகதி யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றில் பா. சஞ்சீவனால் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

வழக்குகளினை விசாரணை செய்த நீதவான் 08 பேரிற்கு தலா 10,000/= வீதம் 80,000/= தண்டம் அறவிடப்பட்டதுடன், நீதிமன்றிற்கு வருகை தராத நபரிற்கு அழைப்பு கட்டளை அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளார்.