திருகோணமலை மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நிலையை கண்டு கொள்ளாதவர்கள்...!

Trincomalee Sri Lankan political crisis Eastern Province
By Independent Writer Jun 17, 2024 08:55 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report
Courtesy: H A Roshan

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு, சேனையூர் கிராம சேவகர் பிரிவில் உள்ள நெல்லிக்குளம் மலைத் தொடரின் பாறைகளை உடைப்பதற்கு சனிக்கிழமை (08) பாறை உடைப்பு இயந்திரத்துடன் உடைப்பு வேலைகளை ஆரம்பிக்க முயன்ற போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் உடைப்பு வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் உடைப்பு இயந்திரம் அப்பகுதியில் இருந்து இன்னும் அகற்றப்படவில்லை.

இவ்விடயம் சம்மந்தமாக சேனையூர் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் பொலிஸில் முறைப்பாடு செய்ததாக தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை (09) அப்பகுதியில் மக்கள் கூடி நின்றனர் மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைப்பு விவகாரம்: சம்பவ இடத்திற்கு விரைந்த நீதிபதி

சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைப்பு விவகாரம்: சம்பவ இடத்திற்கு விரைந்த நீதிபதி

இந்து வழிபாட்டு அடையாளம்

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் அபிவிருத்திக்காக எமது வாழ்வாதரத்தினை அழித் தொழிக்கும் நடவடிக்கையினை உடன் நிறுத்த வேண்டும்.

வாழ்வாதாரத்தினை பாதிக்கும் வகையில் மலைகளை உடைப்பதற்கு அனுமதி வழக்கியது யார் என்ற கேள்வியை எமுப்பினர்.

திருகோணமலை மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நிலையை கண்டு கொள்ளாதவர்கள்...! | Condition That Destroys People S Livelihood

சேனையூர் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் கருத்து தெரிவிக்கையில், நாளாந்தம். கூலித் தொழிலையும், நெற்செய்கை, கால் நடை வளர்ப்பு போன்ற வாழ்வாதார முயற்சிகளை நம்பி வாழ்ந்து வரும் மக்கள்தான் இப் பகுதியில் இருக்கின்றனர்.

குளம், வயல், காடு போன்ற வளங்களையே நம்பி வாழ்கின்றனர் மலையைச் சூழவுள்ள வயல்கள், மேய்ச்சல் தரை இயற்கைக் காட்டு வளம் என்பன கல்லுடைப்பால் அழிவுறும் அபாயம் ஏற்படும் என்றார்.

குறித்த  மலையில் இந்து வழிபாட்டு அடையாளங்களும் கானப்படுகின்றது. வளங்களை அழிக்கும் நிலைதான் மக்களையும் மீறி ஏற்படுகிறது வடகிழக்கில் தொல்பொருள் என்ற போர்வையில் தனியார் காணி அபகரிப்பு போன்றன வட கிழக்கில் மாத்திரம் ஏன் இடம் பெறுகின்றது.

சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைப்புக்கு மக்கள் கடும் எதிர்ப்பு

சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைப்புக்கு மக்கள் கடும் எதிர்ப்பு

அதிகாரம் படைத்த முகவர்கள்

வெடி பொருட்களை கொண்டே மலையை தகர்த்தி அதில் உள்ள கற் பாறைகளை எடுக்க முயற்சிக்கின்றனர். சட்ட ரீதியான அனுமதி என்றாலும் அரச திணைக்களங்களின் ஒட்டு மொத்த அனுமதி உடனே எந்த விதமான செயற்பாடுகளையும் மேற் கொள்ள முடியும் இப் பகுதியில் மக்களின் வாழ்வாதாரமாக விவசாய செய்கை குளங்களை நம்பி செய்கை பண்ணப்படுகிறது கால் நடைகள் வளர்ப்பு இடம் பெறுகின்றது.

இவ்வாறான நிலையில் இந்த மலைகளை உடைப்பதனால் பல சூழலியல் தாக்கங்கள் பல பாதக விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருகோணமலை மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நிலையை கண்டு கொள்ளாதவர்கள்...! | Condition That Destroys People S Livelihood

புவிச்சரிதவியல் சுரங்கப்பணியகம்,வனஜீவராசிகள் திணைக்களம், சுற்றாடல் அதிகார சபை,தொல்பொருள் திணைக்களம் ,பிரதேச செயலகம்,காணி திணைக்களம்,விவசாய சம்மேளனம் உட்பட பல திணைக்களங்களின் அறிக்கைகள் சாதகமாக பெறப்பட்டதன் பின்புதான் அனுமதிகளை முறையாக பெறலாம்.

ஆனால் அரசியல் அதிகாரம் படைத்த முகவர்கள் மக்களின் கருத்துக்களை செவிசாய்க்காது இது போன்ற விடயங்களில் ஈடுபடுவது கவலையளிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

எது எவ்வாறாக இருந்த போதிலும் அப் பகுதிஅப்பாவி மக்கள் சம்பூர் பொலிஸாரால் பத்து நபர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

இதன் போது 1979 ஆம் ஆண்டின் 15 ம் இலக்க குற்றவியல் நடைமுறை சட்டக் கோவை 81 கீழ் சமாதான குழவை ஏற்படுத்தக் கூடிய செயல் ஒன்றை செய்த அடிப்படையில் சம்பூர் பொலிஸார் 10 பேரை செவ்வாய்க்கிழமை (11) கைது செய்து பொலிஸ் பிணையில் செல்ல அனுமதித்தனர்.

விடுவிக்கப்பட்ட 10 பேரும் மூதூர் நீதிமன்ற நீதிமன்றில் புதன்கிழமை (12.06.2024) மதியம் 12.20 மணிக்கு முன்னிலையாகினர். நீதிமன்றமானது இவர்கள் அனைவரையும் சொந்தப் பிணையில் செல்ல அனுமதித்தாலும், குறித்த பிரதேசத்தை இம் மாதம் 15ஆம் திகதியன்று நீதிவான் பார்வையிடுவதாக மன்றில் தெரிவிக்கப்பட்டது.

திருகோணமலை - நெல்லிக்குளம் பாறை உடைப்பு : கைது செய்யப்பட்ட 10 பேர் பிணையில் விடுவிப்பு

திருகோணமலை - நெல்லிக்குளம் பாறை உடைப்பு : கைது செய்யப்பட்ட 10 பேர் பிணையில் விடுவிப்பு

வாழ்வாதார அழிப்பு

10 பேருக்கும் சார்பாக சட்டத்தரணிகளான பு. முகுந்தன், ந. மோகன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர். இதில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை தலைவர் சண்முகம் குகதாசன் குறித்த பிரதேசத்துக்கு விஜயம் செய்து மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

திருகோணமலை மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நிலையை கண்டு கொள்ளாதவர்கள்...! | Condition That Destroys People S Livelihood

"பல வருட காலமாக இங்கு குடியிருந்து வருகிறோம் இங்கு பயிர்ச் செய்கை மூலமே வாழ்வாதாரத்தை கொண்டு சீவிக்கிறோம் அதற்குள் இம் மலையை உடைத்தால் நாங்களும் அழிந்து விடுவோம் மலை உடைப்பு தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்ய சென்ற போதும் முறைப்பாட்டை ஏற்காமல் உரிய இடத்துக்கு வந்து அவர்களை வேலைகளை செய்ய விட்டு எங்களை கைது செய்தார்கள்.

எனவே வாழ்வாதாரத்தை அழித்து நாசமாக்கி மலையை உடைக்க வேண்டாம்" என அப் பகுதி குடும்பத் தலைவி ஒருவர் தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.

மக்கள் உரிமைகளை செவிமடுக்காது பொலிஸாரும் அடாவடியில் ஈடுபட்டதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். பொய் குற்றச்சாட்டை முன்வைத்து அப்பாவி மக்களை கைது செய்து சிறையில் அடைப்பதும் உரிமைகளை மீறும் செயலாகும் இவ்வாறாக சிறுபான்மை மக்கள் மீது அதிகாரத்தை வைத்து அவர்களை அடக்கி ஒடுக்க நினைப்பதும் அதிகார துஷ்பிரயோகமாக கருதப்படுகிறது .

அன்றாட ஜீவனோபாயத்தை கூட தங்களால் மேற்கொள்ள முடியாமல் இம் மக்கள் வருந்துகின்றனர். பாடசாலை செல்லும் மாணவர்கள்,குழந்தைகளை வைத்து பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் வாழ்ந்து வரும் மக்களின் வாழ்வாதாரத்தை ஏன் அழிக்க நினைக்கிறார்கள்.

"மாறி காலம் தவிர்ந்த ஏனைய காலங்களில் இந்த குளத்தை நம்பியே விவசாயத்தில் ஈடுபடுகிறோம். சுமார் 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கிறோம் " என அப் பகுதி விவசாயி ஒருவர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை - நெல்லிக்குளம் மலை உடைப்புக்கு மக்கள் எதிர்ப்பு

திருகோணமலை - நெல்லிக்குளம் மலை உடைப்புக்கு மக்கள் எதிர்ப்பு

உத்தியோகத்தர்களின் மூலமான அனுமதி

அரசாங்க திணைக்களங்களின் துறைசார் உத்தியோகத்தர்களின் மூலமான அனுமதிகள் ஊடாக அனுமதிகள் வழங்கப்பட வேண்டும் மலை உடைப்புக்கு பயன்படுத்தும் வெடிபொருட்கள் மூலமாகவும் ஒலி மாசடைவு உட்பட பல பாதக விளைவுகள் ஏற்படக்கூடும் இதனால் அப் பகுதி மக்களே பாதிக்கப்படுவார்கள்.

திருகோணமலை மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நிலையை கண்டு கொள்ளாதவர்கள்...! | Condition That Destroys People S Livelihood

மக்களுடைய விவசாய செய்கை கால் நடை வளர்ப்பு சுத்தமான நீரை பெற முடியாது குளங்கள் பாதிப்பு என பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.

"காய்ந்த விறகுகளை கூட எடுக்க முடியாது என வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தடுத்து நிறுத்துவர். ஆனால் இவர்களுக்கு மலையை உடைக்க அனுமதி கொடுப்பார்கள். பெரும் கஷ்டத்துக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறோம்.

அரசாங்கம் தான் மக்களை பாதுகாக்க வேண்டும். இதற்காக அரசாங்கம் உதவ வேண்டும் " என குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

“மக்களுக்கு ஒரு சட்டம் மலையை உடைப்பவர்களுக்கு ஒரு சட்டமா சட்டத்தின் முன் யாவரும் சமம் என்ற வார்த்தைக்கே அர்த்தமற்றதாகிவிடுகிறது.

இந்த மலையால் 200வருடங்கள் பழமை வாய்ந்த கோயில் ஒன்று உள்ளது வணக்கஸ்தளங்களை சேர்த்து உடைக்க முற்படுகிறார்கள் வாழ்வாதாரத்தை நம்பி செயற்படும் எங்களை வன்முறையை தூண்டியதாக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கைது செய்தார்கள்.

பல்வேறு இக்கட்டான சூழ் நிலையில் வாழும் மக்களை அச்சுறுத்தி செயற்படுவதும் வாழ்வாதாரத்தை அழிப்பதும் மக்கள் மீது திணிக்கும் துஷ்பிரயோகமாக உள்ளது. அப்பாவி மக்களுக்கான வாழ்வாதாரத்தை அமைத்துக் கொடுப்பதும் அவர்களை பொருளாதார ரீதியான முன்னேற்றங்களை கொண்டு சேர்ப்பதும் அரசாங்கம் மீதுள்ள கடமையாகும்” என மூதூர் நீதிமன்றத்தில் இடம் பெற்ற வழக்கின் பின் ஊடகங்களுக்கு மக்கள் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்

இந்த மலையை உடைப்பதால் பல்வேறு இன்னல்களை மக்கள் எதிர்நோக்க வேண்டி ஏற்படும் எங்களது வாழ்வாதாரம் இங்கு தான் உள்ளது விவசாயச் செய்கை கால் நடை வளர்ப்பு போன்றன இதன் மூலம் பாதிக்கப்படலாம்.

அரசாங்கம் மக்களூக்காக தான் இருக்கிறது மக்கள் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றனர். எனவே மக்களுக்காக பல விடயங்களை சாதகமான நிலமைகளை உருவாக்க உரிய அரச உயரதிகாரிகள் முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US