நீதித்துறையை கேள்விக்குள்ளாக்கியுள்ள பொலிஸார்: வெடுக்குநாறி கைது தொடர்பில் வெளியாகிய கண்டனம்
நீதிமன்றத்தினால் அனுமதியளிக்கப்பட்ட வழிபாட்டு உரிமையைக்கூட தூக்கியெறிந்து
நீதித்துறையை பொலிஸார், கேள்விக்குறியாக்கியுள்ளனர் என முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வெடுக்குநாறி மலை கைது சம்பவம் தொடர்பில் வெளியிட்ட கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பௌத்த மேலாதிக்கம்
“பொலிஸ் பிரிவுகளை ஏவிவிட்டு இலங்கை அரசானது எமது தொன்மையை சிதைத்து தனது பௌத்த மேலாதிக்கத்தை வேரூன்ற வைக்க முனைகின்றது.
இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக அண்மையில் மகா சிவராத்திரி தினத்தன்று எமது வெடுக்குநாறி ஆதிலிங்ஆகஸ்வரர் ஆலயத்தில் பூஜை நடாத்தச் சென்ற பூசகரையும் அவரோடு சென்ற நிர்வாகத்தினரையும் எந்தவித குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்காது கைது செய்துள்ளனர்.
அத்தோடு அங்கு சென்ற பக்தர்களையும் துன்புறுத்தி அவர்களின் வசதிக்காகக் கொண்ட சென்ற உதவியளிக்கும் பெருட்களையும் தூக்கியெறிந்து துன்பப்படுத்தியுள்ளனர்.
நீதிமன்றத்தினால் அனுமதியளிக்கப்பட்ட வழிபாட்டு உரிமையைக்கூட தூக்கியெறிந்து நீதித்துறையைக் கேள்விக்குறியாக்கியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட எம் அடியவர்களின் வழக்கினைச் ஜோடிப்பதற்காக தொல்பொருட் திணைக்களம், வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் போன்ற நெருப்பெடுத்துக் கொடுக்கும் மந்திரிகளின் உதவியை நாடி இல்லாத குற்றச் சாட்டுக்களைச் சுமத்தி இன்று அவர்களை சிறையில் தள்ளியுள்ளனர்.” என்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
