உரமானியம் வழங்குவதில் தாமதம்! விவசாய அமைப்புகள் கண்டனம்
சிறுபோக பயிர்ச்செய்கைக்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டிய வரும் உரமானியம், இதுவரை பெரும்பான்மையான விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.
தேசிய விவசாயிகள் ஒன்றியத்தின் தலைவர் அனுராத தென்னகோன் மேற்கண்ட தகவலை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும் உரமானியம் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டு வந்த பணம் இம்முறை பயிர்ச் செய்கைக்கான நிவாரணம் என்ற பேரில் வழங்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
[T2XGWE3 ]
ஐந்து இலட்சம் விவசாயிகள்
அத்துடன் இருபத்தி ஐயாயிரம் ரூபா உரமானியத்தை முன்னைய காலங்கள் போன்று ஒரே தடவையில் வழங்காமல் இம்முறை முதல் தவணையாக பதினைந்தாயிரம் ரூபாவும், இரண்டாம் தவணையில் பத்தாயிரம் ரூபாவுமாக இரண்டு தடவைகளில் வழங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆயினும் பயிர்ச்செய்கை ஆரம்பித்து தற்போதைக்கு ஒருமாதம் கடந்து விட்டது. கடந்த 22ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட உரமானியம் வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் இதுவரை எண்பத்தி எட்டாயிரம் விவசாயிகளுக்கு மாத்திரமே உரமானியம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சுமார் ஐந்து இலட்சம் விவசாயிகள் உள்ளனர். அந்த வகையில் பெரும்பாலான விவசாயிகளுக்கு இதுவரை உரமானியம் வழங்கப்படவில்லை என்றும் அனுராத தென்னகோன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 17 மணி நேரம் முன்

பிரம்மபுத்திரா நதி இந்தியாவிற்குள் பாய்வதை சீனா நிறுத்த வேண்டும்! பாகிஸ்தான் விடுத்த கோரிக்கை News Lankasri
