நீதி அமைச்சருக்கு எதிராக சுமந்திரன் சபையில் கண்டனம் (Video)
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் 5 பேர் கைது செய்யப்பட்டு என்னை கொலை செய்ய முயற்சித்தனர் என்ற ரீதியில் வைத்து இருக்கிறார்கள். அவர்களை விடுவிப்பது தொடர்பில் நான் எதும் சொல்லவில்லை என்று நீதி அமைச்சர் குறை கூறியுள்ளமை மிகவும் ஒரு தவறான கருத்து என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இன்று (04.12.2023) நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
மேலும், நிலுவையிலே உள்ளவொரு வழக்கை பற்றி அவர் இவ்வாறு பேசியிருக்க கூடாது. அவர்களை கைதுசெய்யுமாறு நான் முறைப்பாடு செய்யவில்லை.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தை உபயோகிக்க கூடாது என்று அவர்கள் கைது செய்யப்பட்ட உடனேயே பகிரங்கமாக நான் சொல்லி இருந்தேன்.அவர்கள் பிணையில் விடுவித்தது தொடர்பில் நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் நாடாளுமன்றில் தெரிவித்த கருத்துக்கள் கீழ் வரும் காணொளியில்....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |