காத்தான்குடியில் வடிகான் அமைப்பில் இடம்பெறும் மோசடி குறித்து கண்டனம்
காத்தான்குடி - மீன்பிடி இலாகா வீதியில் அமைக்கப்படும் வடிகான் அரசியல் செல்வாக்கினால் மாற்றி நிர்மானிக்கப்பட்டு வருவது ஒரு முறைகேடான செயல் என சமூக செயற்பாட்டாளர் ஏ.சி.எம். மீராஸாஹிப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
குறித்த வீதி வீதி அதிகார சபைக்கு செந்தமான வீதியில் வலது பக்கமான பிரதான வீதி வரைக்கும் வடிகான் அமைக்க திட்டமிடப்பட்டு அமைக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டு சுமார் நூறு மீற்றர் தூரம் வரை நிர்மானப்பணிகள் இடம்பெற்று வருகின்றது.
பிழையான முறை
இந்நிலையில், "அங்கு வீதியில் வீடு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதால் வடிகானை தொடராது இடையில் நிறுத்திவிட்டு அதனை வீதியின் குறுக்கே திருப்பி இடது பக்கம் வடிகானை நிர்மானித்து பிரதான வீதிவரைக்கும் கொண்டு செல்லம் ஒரு பிழையான முறையில் வடிகானை நிர்மானித்து வருவது ஒரு முறைகேடாகும்.
இந்த வீதியில் வீடு அமைக்க முதலில் யார் அனுமதி வழங்கியது. இது அரசியல் செல்வாக்குடன் இப்படி நடக்கும் என்றால் எப்படி இந்த வீதியை அபிவிருத்தி செய்வது? இது வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதி இவர்கள் என்ன பார்த்துக் கொண்டிருந்தனர்.
வீதி அதிகாரசபை நகசைபைக்கு எனவும் நகரசபை வீதி அதிகார சபைக்கு என ஆளுக்கு ஆள் மாற்றிக் கொண்டிருக்கின்றனர் ஆனால் மக்களுக்கு தீர்வு இல்லை. எனவே இது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்தவேண்டும்” என ஏ.சி.எம். மீராஸாஹிப் குறிப்பிட்டுள்ளார்.




