கல்வி சாரா ஊழியர்களுக்கான கொள்கையை தயாரிக்க விசேட திட்டம்: கல்வி அமைச்சு
அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும், கல்வித்துறையில் பணிபுரியும் கல்வி - கல்வி சாரா ஊழியர்களுக்கான கொள்கையைத் தயாரிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளிகள், மாகாணப் பள்ளிகள் உள்ளிட்ட கல்வி - கல்வி சாரா ஊழியர்களின் விடுப்பு, ஒழுங்கு விசாரணை போன்றவை அந்தக் கொள்கைக்கு ஏற்றால் போல் அரச சேவை அரசியலமைப்பின் ஊடாக நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பு பொது ஊடக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கல்வி சாரா ஊழியர் தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஊழியர்களுக்கான இடமாற்ற சபை
நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கான இடமாற்ற சபைகள் இயங்கி வருவதாகவும், கல்வி அமைச்சிலும் இடமாற்றச் சபை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், ஊழியர் இடமாற்றம், விடுப்பு எடுப்பதில் ஒருமித்த கருத்து பேணப்பட வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
''ஒழுக்காற்று விசாரணைகள், முதலியன விடயங்கள் இதற்குள் காணப்படுகின்றது.
நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அனைத்து 10,126 பள்ளிக் குழுமங்களும், பௌதீக மற்றும் மனித வளங்களை நிர்வகிப்பதற்கு வசதியாக 1,200 ஆகப் பிரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிறுவனங்கள் மிகவும் பயனுள்ள, தரமான மற்றும் திறமையான சேவைகளைப் பெறமுடியும்.
இயன்றவரை மறுசீரமைப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கல்வி அமைச்சர் என்ற வகையில் கொள்கைத் தீர்மானங்களை மேற்கொள்ளும் நேரத்தை விட கல்வித்துறையில் தொழில்சார் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அதிக நேரத்தை செலவிட வேண்டியுள்ளது.
இதன்படி, மாகாண மட்டத்தில் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பின்னணி உள்ளது. கல்வி இராஜாங்க அமைச்சர் சமீபத்தில் அனைத்து மாகாண அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
எதிர்காலத்தில் கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் தொழில்சார் பிரச்சினைகளுக்கு தமது மாகாணத்துக்குள் மிக இலகுவாக தீர்வு காணப்படும்." என அமைச்சர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |