அனுராதபுரத்தில் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தினால் கருத்தறியும் பணிகள் முன்னெடுப்பு
உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகத்தினால் (ISTRM) அனுராதபுரம் மாவட்டத்தில் மக்கள் கருத்தறியும் பணிகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான நிலையான கட்டமைப்பை தயாரிப்பதற்கான செயன்முறைக்கு பொதுமக்களின் பரிந்துரைகளை பெற்றுக்கொள்வதை நோக்கமாகக் கொண்டு இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது.
உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான செயலகத்தின் பணிப்பாளர் நாயகம், அதிகாரிகள், மகா சங்கத்தினர், அனுராதபுரம் மறை மாவட்ட பேராயர் மாஷல் அந்தாதி, அனுராதபுரம் முஸ்லிம் பள்ளிவாசல் மௌலவி அப்துல் கயூம் தலைமையிலான குழுவினர் உள்ளிட்ட தரப்பினரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொண்ட பிரச்சினை
இவர்களுக்கு மேலதிகமாக, நொச்சியாகம, மஹவிலச்சிய பிரதேசவாசிகள், பிரதேச செயலாளர்கள், கிராம அதிகாரிகள், அனுராதபுரம் மாவட்டச் செயலாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் உள்ளிட்ட குழுவினர், அனுராதபுர சிவில் செயற்பாட்டாளர்கள், பிரதேச முப்படை அதிகாரிகள், அனுராதபுரம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், ஊடகவியாலளர்கள், உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கப் செயலகம் மற்றும் ஜனசபா அலுவலகத்தின் அதிகாரிகள், மதவாச்சி பிரதேசத்தில் யுத்தத்தில் பாதிப்புக்களை எதிர்கொண்டிருந்தவர்கள், எலவக, மஹகொன்கஸ்கட பிரதேசவாசிகள், கெபதிகால்லாவ மற்றும் ஹொரவ்வொத்தானை பிரதேச செயலக பிரிவினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது வடக்கு கிழக்கில் ஏற்பட்ட மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள், அதனால் ஏற்பட்ட பயங்கரமான அனுபவங்கள், எதிர்காலத்தில் அவ்வாறு நடப்பதை தடுப்பதற்கான அவசியம் உள்ளிட்ட நோக்கங்களை அடைவதற்கான சுயாதீன அலுவலகம் ஒன்றை ஸ்தாபிக்க வேண்டியதன் அவசியம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.