கணனி மின்னேற்றி வெடித்து மாணவன் பலி
காலி பலப்பிட்டிய படபொல கொபேய்துடுவ பிரதேசத்தில் பாடசாலை மாணவன் கணனி மின்னேற்றி வெடித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்திகெட்டிய பென்வல வீதி பகுதியை சேர்ந்த 14 வயதான டப்ளியூ.ஏ. செனத் இந்துவர என்ற இந்த பாடசாலை மாணவன் கணனி மின்னேற்றியை இயங்க செய்துக்கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
கணனியை மடியில் வைத்திருந்த மாணவன்

மின்னேற்றி வெடித்த போது மாணவன் கணனியை மடியி வைத்துக்கொண்டிருந்தாகவும் அப்போது மின்னேற்றி மின் இணைப்பில் சொருகப்பட்டிருந்தது எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மின்னேற்றி வெடித்ததால் மாணவனை மின்சாரம் தாக்கி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். நேற்று நடந்த இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்! Manithan
அந்த குழந்தையா இது!! சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக நடித்தவர் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க! சமீபத்திய புகைப்படம்.. Cineulagam
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri