தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறியவர்களுக்கு கட்டாய பி.சி.ஆர் பரிசோதனை
கிண்ணியா பிரதேச சுகாதாரப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடியவர்களுக்குக் கட்டாய பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி எம் எச் எம் ரிஸ்வி தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி இன்று (23) நடமாடிய 25 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன.
அதேநேரம் மக்கள் சட்டத்தை மதித்து அவதானமாகவும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும்.
அத்துடன் கிண்ணியா சுகாதாரப் பிரிவுக்குட்பட்ட பிரிவில் விசேட தேவையுடையவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்காக நடமாடும் சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.






தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா Cineulagam

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
