அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்த சபாநாயகர்! எழுந்துள்ள குற்றச்சாட்டு
சபாநாயகர் ஜகத் விக்ரமரட்ன(Jagath Wickramaratne) அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சபாநாயகர் அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தார் என லஞ்ச உழல் மோசடி குறித்த விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு
புதிய ஜனநாயக முன்னணியின் கொழும்பு மாவட்ட தலைவரும் மஹரகம நகரசபையின் உறுப்பினருமான தினேஸ் அபேகோன் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் சிலர் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர்.
சபாநாயகர் ஜகத் விக்ரமரட்னவிற்கு அதிகாரபூர்வ இல்லமொன்று வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் சபாநாயகர் கொழும்பு 4 லொரிஸ் வீதியில் அமைந்துள்ள பொதுநிர்வாக அமைச்சிற்கு சொந்தமான குடியிருப்புத் தொகுதியின் 8/1 என்ற இலக்க வீட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் பயன்படுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதிகாரபூர்வ இல்லங்கள்
எந்தவொரு அரச அதிகாரிகளுக்கும் இரண்டு அதிகாரபூர்வ இல்லங்களை பயன்படுத்த அனுமதியில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுற்றறிக்கை 14/2025 பிரகாரம், சபாநாயகர் இரண்டு வாகனங்களை மட்டும் பயன்படுத்தலாம் என்றும், 900 லிட்டர் எரிபொருளே வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது அவர் பின்வரும் மூன்று வாகனங்களை பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது:
• வான் – NC 4923
• கார் – CAN 8753
• கார் – CBI 5198
அரச சொத்துக்களை துஸ்பிரயோகம்
2023ம் ஆண்டு ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் பிரகாரம் இவ்வாறு அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்வது குற்றச் செயலாகும் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சபாநாயகரின் பிரத்தியேக செயலாளருக்கு நாடாளுமன்றிலிருந்து பகல் உணவு வழங்கப்படுவதாகவும் சபாநாயகரின் வாகனத்தை செயலாளர் பயன்படுத்துவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யுமாறு லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.