மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சருக்கு எதிராக முறைப்பாடு
மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இலங்கை பசுமை அமைப்பு முறைப்பாடு செய்துள்ளது.
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் இன்றைய தினம் இந்தமுறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் குமார ஜயகொடி உடன் பதவி விலக வேண்டுமென பசுமை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் உரக் கூட்டுத்தாபனத்திற்கு 88 லட்சம் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களையும் பசுமை அமைப்பு லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிடம் ஒப்படைத்துள்ளது.
அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாகவும் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் பசுமை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவான தரப்புக்களும் அமைச்சர் பதவி விலகுவது உசிதமானது என சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



