யாழில் கடந்த வருடம் 13 பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் பதிவு
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த வருடம் 13 பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் மாவட்ட பெண்கள் அபிவிருத்தி திணைக்களத்திற்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் பொதுப்போக்குவரத்து பேருந்துகளில் பெண்களுக்கு இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களை இல்லாதொழிப்பதற்கான விழிப்புணர்வு செயற்பாட்டில் கலந்து கொண்டு ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
''பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாடு பூராகவும் இடம்பெற்று வருகின்றன. அதனை கட்டுப்படுத்தும் முகமாகப் பெண்கள் விவகார அமைச்சினால் ஒரு விழிப்புணர்வு செயற்பாடு நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு அங்கமாக யாழ்ப்பாண மாவட்டத்திலும் இன்றையதினம் முன்னெடுக்கப்படுகிறது. இந்த வன்முறைச் சம்பவங்களை இல்லாதொழிப்பதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் மிக அவசியமாகும்.
குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் மற்றும் மூத்த பிரஜைகள் இந்த விடயத்தில் மிகவும் ஒத்துழைப்போடு செயற்படுவதன் மூலமே பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களை இல்லாதொழிக்க முடியும்.
சில வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறும் போது அதனை வெளிக் கொணராத நிலையும் காணப்படுகின்றது. எனவே இந்த அனைத்து வன்முறைச் சம்பவங்களையும் இல்லாதொழிப்பதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.





siragadikka aasai: படுமோசமான முத்து.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்- பேரானந்தத்தில் விஜயா Manithan

சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam
