முச்சக்கரவண்டி சாரதிகள் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு
நாட்டில் முச்சக்கரவண்டி சாரதிகள் மக்களிடம் நியாயமற்ற விதத்தில் பணம் அறவிடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இந்நிலையை தவிர்க்க அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் இயங்கி வரும் முறைசாரா சேவையினால் ஈடுபடும் சில முச்சக்கரவண்டி சாரதிகள் பயணிகளிடம் அநியாயமாக பணம் அறவிடுவதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
சேவை குறித்து விவாதங்கள்
முச்சக்கரவண்டி சேவையை முறையான ஒழுங்குமுறைக்கு உட்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதன் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

சூரிய அஸ்தமனத்தை பார்க்க தொடருந்தில் வரும் பக்தர்களிடம் முச்சக்கரவண்டி சாரதிகள் அநியாயமாக பணம் அறவிடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்ததையடுத்து, மீண்டும் முச்சக்கரவண்டி சேவை குறித்த விவாதங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 14 மணி நேரம் முன்
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri