முல்லைத்தீவில் விஷமிகளால் வயல்வெளிக்கு தீமூட்டப்பட்டுள்ளமை தொடர்பில் முறைப்பாடு (photos)
முல்லைத்தீவு - குமுழமுனை பகுதியில் வயல்வெளி விஷமிகளால் தீமூட்டி சேதமாக்கப்பட்டுள்ளதாக செம்மலை பகுதியிலுள்ள பொலிஸ் காவலரணில் முறைப்பாட்டு செய்யப்பட்டுள்ளது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் நேற்று (16.02.2023) பதிவாகியுள்ளது.
ஓய்வுபெற்ற கால்நடை அபிவிருத்தி போதனாசிரியரான வேலுப்பிள்ளை இரத்தினசபாபதி என்பவருடைய வயல் நிலமே தீமூட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

விஷமத்தனமாக செயற்பாடு
அறுவடை செய்யத் தயாராக இருந்த நிலையிலேயே இவ்வாறான விஷமத்தனமாக செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.
பொதுவேலைத்திட்டங்களில் அதிக ஈடுபாட்டுடன் இருப்பதால் இவ்வாறாக பழிவாங்கப்பட்டுள்ளதாகவும், 10 வருடங்களாக குறித்த நிலத்தில் விவசாய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் இப்படியான விசமத்தனமான நடவடிக்கைகள் இதுவரை நடைபெற்றதில்லை எனவும் முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam