டில்வினுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு! தயாசிறி ஜயசேகர நடவடிக்கை
ஜே..வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் குறித்து வினவியபோது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாகாண சபைத் தேர்தலை இந்தாண்டு நடத்த முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் தவறானதொரு கருத்தாகும்.
இலங்கையில் அனைத்து துறையினரும் மீண்டும் வீட்டிலிருந்து பணியாற்றும் நடைமுறை - அரசாங்க தரப்பிலிருந்து வெளியான தகவல்
தேர்தல் பற்றிய தீர்மானம்
தேர்தல் பற்றி தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மக்கள் விடுதலை முன்னணியின் பெலவத்த காரியாலயத்துக்கோ அக்கட்சியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வாவுக்கோ கிடையாது.
சுயாதீன ஆணைக்குழுக்கள் தற்போது சுயாதீனமாக செயற்படுகிறதா என்பதில் பாரிய சந்தேகம் காணப்படுகிறது. ஜே.வி.பி காரியாலயத்தின் தீர்மானத்துக்கு அமையவே தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம் எடுக்க வேண்டிய நிலை காணப்படுகிறது என்பது டில்வின் சில்வாவின் கருத்து ஊடாக வெளிப்படுகிறது.

இவரின் கருத்துக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிப்போம். காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாணசபைத் தேர்தலை உடன் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முன்வைத்துள்ள தனிநபர் பிரேரணையை நிறைவேற்றி அதற்கமைய மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்தியுள்ளோம்.
மாகாணசபைத் தேர்தலை எந்த தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவது என்பது பற்றி ஆராய்வதற்காக நாடாளுமன்ற விசேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற வேளையில் தான் டில்வின் சில்வா மாகாண சபைத் தேர்தல் இந்தாண்டு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் இந்தாண்டு நடைபெறாது என்று குறிப்பிடுவதற்கு மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வாவுக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போட்ட போது ' தேர்தலை நடத்த நிதி இல்லை' என்று குறிப்பிட்டார். அதற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தார்கள்.
ரணில் விக்ரமசிங்க உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு குறிப்பிட்ட தர்க்கத்தையே மாகாணசபைத் தேர்தல் விவகாரத்தில் டில்வின் சில்வா குறிப்பிடுகிறார்.
பேசாமல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக டில்வின் சில்வாவையே நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 2 மணி நேரம் முன்
'சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது'.. நடிகை சைத்ரா அச்சரின் கிளாமர் புகைப்படங்கள் Cineulagam