அவுஸ்திரேலிய பேராசிரியரொருவர் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் முறைப்பாடு
2019ல் மேற்கொள்ளப்பட்ட 250பேரை பலிகொண்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களில் தமக்கு தொடர்பிருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தமைக்கு எதிராக அவுஸ்திரேலிய பேராசிரியர் ஒருவர் ஐக்கிய நாடுகள் சபையில் முறைப்பாட்டை செய்துள்ளார்.
கடந்த பெப்ரவரியில், இலங்கை அரசாங்கம் தமது மேற்கொண்டு விசாரணையை அறிக்கையை இறுதி செய்தது, இதனையடுத்து இலங்கை அரசாங்கத்தின் அறிக்கை, பகிரங்கமாக வெளியிடப்படவில்லை எனினும் இதனை அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றில் பார்த்ததாக பேராசியர் தாலிப் குறிப்பிட்டுள்ளார்.
அதில பயங்கரவாத குழுக்களின் உறுப்பினர்களை சிரியாவிற்கு ஆயுத பயிற்சிக்காக பயணிக்க தாம் வசதி செய்து கொடுத்த குற்றச்சாட்டு தம்மீது சுமத்தப்பட்டுள்ளதாக தாலிப் தெரிவித்துள்ளார்.
எனினும் அவுஸ்திரேலிய குடிமகனான தமக்கும் இந்த செயற்பாட்டுக்கும்; எந்த தொடர்பும் இல்லை என்று பேராசிரியர் தாலிப் மறுத்துள்ளார், மேலும் அவரை அவதூறு செய்ததற்காக இலங்கை அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடுக்கப்போவதாக அவர் எச்சரித்துள்ளார்.
பொது மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் உடன்படிக்கைக்கு விருப்ப நெறிமுறையின் கீழ் தமது சட்டத்தரணிகள் அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையில் இது தொடர்பில் முறைப்பாட்டு மனு ஒன்றை கையளித்துள்ளதாக தாலிப் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கட்டாரில் வைத்து பேராசிரியர் தாலிப் கைதுசெய்யப்பட்;டு தடுத்து
வைக்கப்பட்டிருந்தார்.
எனினும் இந்தக்கைதுக்கும் இலங்கை அரசாங்கத்தின் அறிக்கைக்கும் எந்த தொடர்பும்
இல்லை என்று அறிவிக்கப்பட்டதாக தாலிப் குறிப்பிட்டுள்ளார்

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 36 நிமிடங்கள் முன்

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam
