முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் வழக்கு ஒத்திவைப்பு!
மணல் அகழ்வுத் திட்டமொன்றை கொரிய நிறுவனமொன்றுக்கு வழங்கியதன் ஊடாக அரசாங்கத்திற்கு இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று(30.01.2026) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
இதன்போது, கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டமொன்றை கொரிய நிறுவனமொன்றுக்கு வழங்கியதன் ஊடாக அரசாங்கத்திற்கு இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பான விடயங்களை முன்வைத்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள், சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், அதன் முன்னேற்றத்தை அறிக்கையிடுவதற்கு திகதியொன்றை வழங்குமாறும் கோரியிருந்தனர்.
முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான், முறைப்பாட்டை ஜூலை 10ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்கத் திகதியிட்டதுடன், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றத்தை அறிக்கையிடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
ஆயுதப் படைகளின் வசம் ஹோர்முஸ் நீரிணை: எந்தவொரு நாடும் பயன்படுத்த இடமளிக்கமாட்டோம் - ஈரான் எச்சரிக்கை
போலி கணக்குகளை பயன்படுத்தி QR குறியீடு மோசடி! உத்தியோகபூர்வ வலைத்தளம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
ஈரானின் மணிமகுடத்தை கைப்பற்ற துடிக்கும் ட்ரம்ப்! குறிவைக்கப்பட்ட இலக்குகள் - அதிரடியாக களமிறங்கவுள்ள துருப்புகள்..
புடினின் தனிப்பட்ட அழைப்பு... ஈரானின் புதிய உயர் தலைவருடன் வெளியேறிய ரஷ்ய இராணுவ விமானம் News Lankasri
ஜனனி-சக்தியை காலி செய்ய தேவசகாயம் போட்ட கொடூரமான பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
சனியின் பார்வையால் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்... வறுமை நீங்கி செல்வம் பெருகுவது எந்த ராசிக்கு? Manithan