முக்கிய பொலிஸ் அதிகாரியொருவருக்கு எதிராக ஜனாதிபதி செயலகத்தில் முறைப்பாடு
பொலிஸ் திணைக்களத்தின் முக்கிய அதிகாரி ஒருவருக்கு எதிராக ஜனாதிபதி செயலகத்தில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த அதிகாரி தற்போதைக்கு முக்கிய பொலிஸ் பிரிவொன்றுக்கும், பொலிஸ் படையணியொன்றுக்கும் கட்டளை வழங்கும் பொறுப்பதிகாரியாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
பொலிஸ் விசேட விசாரணைப்பிரிவின்
எனினும் குறித்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிரான தவறான நடத்தைகள் மற்றும் அத்துமீறல்கள், ஒழுங்கீனமான நடத்தை, சட்டத்துக்குப் புறம்பான செயற்பாடுகள் மற்றும் கடந்த காலங்களில் அரகலய போராட்டக்காரர்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதல்கள் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அவருக்கு எதிராக பொலிஸ் விசேட விசாரணைப்பிரிவின் மூலமான விசாரணையொன்றும் நடைபெற்றிருந்தது.
எனினும் குறித்த அதிகாரி தனக்கு எதிரான விசாரணைகளை மழுங்கடித்துள்ளதாக குறித்த குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அவரை முக்கிய பொறுப்புகளில் இருந்து நீக்கி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள முறைப்பாட்டில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



