போராடும் தலைவர்களை வேட்டையாடும் முயற்சி குறித்து எச்சரிக்கை

Army Protest Parliament Education
By Independent Writer Aug 09, 2021 09:23 AM GMT
Report

கல்வியை இராணுவமயமாக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் முன்னணி தலைவர்களை சிறையில் அடைக்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரச மற்றும் தனியார் துறைகளில் பல முன்னணி தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

ஓகஸ்ட் 3ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு அருகில் அருகில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட பல தலைவர்கள் ஏற்கனவே சட்டவிரோதமாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொது சொத்து மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.

தொழிலாளர் போராட்ட நிலையத்தின் சமீர கொஸ்வத்த, கோஷிலா, அனைத்துப் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று திரும்பிக்கொண்டிருந்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே, ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் அமில சந்தீப ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே, ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் அமில சந்தீப ஆகியோர் ஆகஸ்ட் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சிவில் உடையில் வந்த குழு மற்றும் ஒரு சீருடை அணிந்த அதிகாரி ஆகியோர் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வசந்த முதிலிகே கைவிலங்கு மாட்டி அழைத்துச் சென்றதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

கடத்தப்பட்டு ஒரு நாள் காணாமல் போன அமில சந்தீப காவலில் இருப்பதை பொலிஸார் பின்னர் வெளிப்படுத்தினர்.

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான அமிந்த லக்மல் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, தங்களை பொலிஸ் என அறிமுகப்படுத்திய ஒரு குழு அவரை கடத்த முயன்றுள்ளதோடு, மாணவர்கள் உள்ளிட்டவர்களின் எதிர்ப்பினை அடுத்து தடுக்கப்பட்டதாக, சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

100 வருடங்களுக்கு மேல் புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் தலைவரும் பொது சொத்து மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் தலைவரும் இணை ஏற்பாட்டாளருமான சத்துர சமரசிங்கவிற்கும் பொலிஸாரின் காவல்துறை ஒடுக்குமுறை இடம்பெற்று வருவதாக, பொது சொத்து மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்கத் தலைவரை பொலிஸ் உளவாளிகள் பின்தொடர்வதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

"அவரது வீட்டுக்கு வருகைத்தந்து வீட்டில் இருப்பவர்களை அச்சுறுத்துவதோடு, பணியபாற்றும் இடங்களைக் கண்டறிய பொலிஸ் உளவாளிகள் அனுப்பப்படுகின்றார்கள்“ என கடந்த 3ஆம் திகதி பேரணியில் உரையாற்றிய சகோதரர் சதுர சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு பதிலாக, போராட்டக்காரர்களை கைது செய்து நாட்டு சிறுவர்களின் முழு கல்வியையும் அழிக்க முயல்வதாக, பொது உடைமை மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் குற்றம் சாட்டுகிறது.

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பல்கலைக்கழக அமைப்பை ஒழுங்குபடுத்தும் பல்கலைக்கழகங்கள் சட்டம் 1978 எண் 16ஐ இரத்து செய்து, அரசாங்கம் கொத்தலாவல பல்கலைக்கழக சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முயற்சிக்கிறது.

தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள், கலைஞர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உட்பட பொதுமக்கள் ஏற்கனவே அரசாங்கத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையாக போராடி வருகின்றனர், கல்வியை இராணுவமயமாக்கும் முயற்சி உட்பட தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் உட்பட பலரை கைது செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, பொதுச் சொத்து மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்கத்தின் இந்த செயல்முறை கருத்து சுதந்திரத்திற்கான ஜனநாயக உரிமைகளுக்கு விழுந்த ஒரு அபாயகரமான அடி எனவும், கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் போராட்டங்களில் ஈடுபடும் மக்கள் மீதான அரசாங்கத்தின் அடக்குமுறையை தனது அமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாக பொது சொத்து மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையம், குறிப்பிட்டுள்ளது.  

மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், ஒட்டுசுட்டான், கொழும்பு

23 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US