பெருந்தோட்டத்தில் கொழுந்து பறிக்கும் போட்டி: ரூ.3 லட்சம் பரிசு வென்ற சீதையம்மா! (Photos)
ஹேலிஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் பணியாற்றும் தோட்டங்களில், பெண் தொழிலாளர்களுக்கு இடையிலான சிறந்த கொழுந்து பறிப்பாளரை தெரிவு செய்யும் இறுதி போட்டி நடைபெற்றுள்ளது.
நேற்றைய தினம் (25.02.2023) நானுஓயா - ரதல்ல, தேயிலை மலையில் நடைபெற்ற இப்போட்டியில், தலவாக்கலை - பெருந்தோட்ட நிறுவத்தின் சமர்செட் பிரிவைச் சேர்ந்த ஆர்.சீதையம்மா முதலிடத்தை பிடித்துள்ளார்.
அவருக்கு 3 லட்சம் ரூபா பணப்பரிசும், தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டுள்ளது.
ஆர்.சீதையம்மா முதலிடம்
ஹொரண, தலவாக்கலை மற்றும் கெலனிவெலி பெருந்தோட்ட நிறுவனங்களில் கீழ் உள்ள 60 தோட்டங்களில் ஆரம்பக்கட்ட போட்டிகள் நடைபெற்று, அவற்றில் வெற்றிபெற்றவர்களிலிருந்து 42 பெண் தொழிலாளர்கள் இறுதிப் போட்டிக்குத் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.
20 நிமிடங்கள் வழங்கப்பட்டு, இக்காலப் பகுதிக்குள் கூடுதல் கொழுந்து பறிப்பவர் வெற்றியாளராகத் தெரிவுசெய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், 20 நிமிடங்களுக்குள் 10 கிலோ, 450 கிராம் கொழுந்தை பறித்து மர்செட் பிரிவைச் 37 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான ஆர்.சீதையம்மா முதலிடத்தை பிடித்துள்ளார்.
இந்தப் போட்டி நிகழ்விற்குப் பிரதம அதிதியாக ஹேலிஸ் நிறுவனத்தின் தலைவர் மொகான்
பண்டித்தகே, ஹேலிஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் டாக்டர் ரொஷான்
ராஜதுரை, உட்பட நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் தோட்ட முகாமையாளர்கள்,
பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிட்டுள்ளது.














சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam

siragadikka aasai: படுமோசமான முத்து.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்- பேரானந்தத்தில் விஜயா Manithan

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
