அமைச்சுப் பதவிகளைப் பகிர்வதில் கடும் போட்டி - உதய கம்மன்பில தகவல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்மொழியப்பட்ட சர்வகட்சி அரசாங்கம் தற்போது அமைச்சுப் பதவிகளைப் பகிர்ந்து கொள்வதில் போட்டி நிலமையாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நாட்டை மீட்பதற்கான முன்மொழிவுகளை விவாதிப்பதற்கு பதிலாக அமைச்சுப் பதவிகளை பகிர்வது தொடர்பில் இன்று பேரம் பேசப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், பதவிகளை பகிர்வது பற்றி பேசாமல் நாட்டை காப்பாற்றுவது பற்றி பேசுவதே இன்று செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலில் இன்னும் அதிகாரப் போட்டியே நிலவி வருவதாகவும், நாட்டை கூட்டாக மீட்கும் முயற்சி இல்லை என்றும், இது மிகவும் துரதிர்ஷ்டவசமான நிலை என்றும் அவர் கூறினார்.
இது வரையில் அனைத்துக் கட்சி அரசாங்கம் கனவுக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருந்ததாகவும் உலகில் இன்னும் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
10 கட்சிகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan
