படகு கவிழ்ந்ததால் கடலில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நஷ்டஈடு
அண்மையில் சூறாவளி தாக்கம் ஏற்பட்டு இரண்டு தினங்களில் கடலிற்கு மீன் பிடிக்கச் சென்று படகு கவிழ்ந்ததால் கடலில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 1 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது.
திருகோணமலையைச் சேர்ந்த மூவருள் ஒருவரான எதிரவீர ஜயசூரிய ஆருகட்டு பட்டபந்திகே ஜானக என்னும் 45 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு படகு கவிழ்ந்ததால் கடலில் மூழ்கி உயிரிழந்தவராவார்.
இதனால் பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 1 மில்லியன் ரூபா நஷ்டஈடு இன்று அவரது குடும்பத்தினரிடம் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கபில நுவன் அத்துக்கோராள மாவட்ட செயலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது.
இதில் மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோரள, திருகோணமலை மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் டபிள்யு.ஏ.ஆர்.சேனாரத்ன உட்படப் பயனாளி குடும்பத்தினரும் கலந்து கொண்டிருந்தனர்.







தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam
