உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: நட்டஈடு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு செலுத்தவேண்டிய நட்டஈட்டு தொகையில் இதுவரை 84மில்லியனுக்கும் அதிகமான தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது வரையில், 03 தடவைகளில் 43 மில்லியன் ரூபாவையும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர 17.25மில்லியன் ரூபாவையும் , அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலாந்த ஜயவர்தன 4.1 மில்லியன் ரூபாவையும் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதி என்ற பெயரில் ஸ்தாபிக்கப்பட்ட நிதிக்காக ஜூன் 19ஆம் திகதி 05 மில்லியன் ரூபாவையும், ஜூன் 26ஆம் திகதி 15 மில்லியன் ரூபாவையும், வழங்கியுள்ளார்.
செலுத்தவேண்டிய தொகை
அத்தோடு, ஹேமசிறி பெர்னாண்டோ ஏற்கனவே செலுத்த வேண்டிய 50 மில்லியன் ரூபாவில் 6 சந்தர்ப்பங்களில் 26 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தாக்குதல் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் தேசிய புலனாய்வுத் தலைவர் சிசிர மெண்டிஸும் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக 10 மில்லியன் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 16 மணி நேரம் முன்

மனைவியுடன் சேர்ந்து இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் ஒவ்வொரு வருடமும் ரூ.1,11,000 பெறலாம்.., Post Office திட்டம் தெரியுமா? News Lankasri

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
