சீரற்ற காலநிலையால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு இம்மாத இறுதியில்
கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு இந்த மாத இறுதியில் வழங்கப்படும் என கமநலக் காப்பீட்டு சபையின் தலைவர் பேமசிறி ஜாசிங்கராச்சி தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பயிர் சேத மதிப்பீடுகளில் சுமார் 95 சதவீதம் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணம் (Jaffna), கிளிநொச்சி (Kilinochchi), திருகோணமலை (Trinco) மற்றும் மன்னார் போன்ற பகுதிகளில் பயிர் சேத மதிப்பீடுகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளன.
பயிர் சேத மதிப்பீடுகள்
விவசாயிகள் அபிவிருத்தி மத்திய நிலையங்களினால் பரிந்துரைக்கப்பட்ட இறுதி இழப்பீட்டு ஆவணங்கள் பெறப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்றும் பேமசிறி ஜாசிங்கராச்சி தெரிவித்துள்ளார்.
விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை, விவசாய அபிவிருத்தி திணைக்களம், விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய சங்க தலைவர்களின் பங்களிப்புடன் சேத மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |