நாட்டில் கிரீம் பூசுவோருக்கு வழங்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மாத்தளை - கவுடுபெலல்ல பகுதியில் இயற்கை அழகுசாதனப் பொருட்கள் என்ற பெயரில் தரமற்ற கிரீம் வகைகளை வர்த்தக ரீதியில் தயாரித்த நிறுவனமொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனம் நேற்றைய தினம் (11.04.2026) நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இந்த தயாரிப்புகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வாசனைத் திரவிய உற்பத்தித் தோட்டங்கள் வழியாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தொழிற்சாலை முற்றுகை
தரமற்ற கிரீம் வகைகளை தயாரித்த குறித்த தொழிற்சாலை மாத்தளை கவுடுபெலல்ல பகுதியில் அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாட்டில் கிரீம் வகைகளை பயன்படுத்துவோர் இது தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக கிரீம் வகைகளை கொள்வனவு செய்யும் போது அவை தொடர்பான முழுமையான அறிவை பெற்றுக் கொள்வதும், தமக்கு பொருத்தமான மற்றும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் மோசமான இரசாயனங்கள் இல்லாத கிரீம் வகைகளை அறிந்து கொள்வனவு செய்வதும் முக்கியம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பரபரப்பான 12 மணிநேர பேச்சுவார்த்தை: அடுத்து என்ன நடக்கும்..! பாகிஸ்தானிலிருந்து அவசரமாக வெளியேறும் அமெரிக்கா
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan