வவுனியா - கமநல அபிவிருத்தி திணைக்கள நீரேந்து பிரதேசத்தில் கம்பி வேலி அமைப்பு(Photos)
வவுனியா - கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழான குளத்து நீரேந்து பிரதேசத்தை கையகப்படுத்தி கம்பி கட்டை வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்றையதினம் (30.04.2023) இரவு இடம்பெற்றுள்ளது.
வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழான பட்டாணிச்சூர் புளியங்குளத்தின் குருமன்காட்டுக்கு அண்மித்த மன்னார் வீதி ஓரமாகவுள்ள நீரேந்து பிரதேசத்தை ஆக்கிரமித்து சில சந்தேகநபர்களால் கம்பி கட்டை போடப்பட்டு கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.

திணைக்கள நடவடிக்கை
இதேவேளை நீரேந்து பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றினை அண்மித்தே குறித்த வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில் அண்மை காலத்தில் ஒரு பெண் தனது வீட்டினை அண்மித்த காணி துண்டம் ஒன்றினை வேலியிட்டு அடைத்துள்ள போது கமநல அபிவிருத்தி திணைக்களத்தினர் ஜேசிபி இயந்திரம் - கொண்டு வேலிகளை அகற்றியதுடன், அப்பெண்ணுக்கு எதிராக முறைப்பாடும் செய்துள்ளனர்.
இதற்கமைய இரவோடு இரவாக குறித்த பகுதியில் கம்பி வேலி அமைக்கப்பட்டு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள போதிலும்
உரிய திணைக்களத்தினால் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 19 மணி நேரம் முன்
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam