மொழியை ஊக்கப்படுத்துவதே சன சமூக நிலையங்களின் நோக்கம் - சிவஞானம் சிறீதரன்
தமிழ் தேசிய இனத்தினுடைய மிகப்பெரிய அடையாளம் மொழியை வளர்க்க சன சமூக நிலையங்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி - சோரன்பற்று சரஸ்வதி சன சமூக நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அறிவை வளர்க்கும் சன சமூக நிலையங்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு சன சமூக நிலையம் உருவாகினால் ஒரு சமூகத்தில் நல்ல மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் ஏற்படும் என்பது கடந்த கால அனுபவங்களாகும். அத்துடன் கடந்த காலங்களில் அறிவை வளர்ப்பதற்கு சன சமூக நிலையங்களே அதிகமான புத்தகங்களை தந்துதவின.
ஒரு கிராமத்தினுடைய வளர்ச்சியே பிள்ளைகளை வாசிக்க தூண்டும். அவ்வாறான வளர்ச்சியில் தான் இந்த சமூகம் முன்னேற்றமடையும். உலகத்தில் சன சமூக நிலையங்கள் மீது அதிக நம்பிக்கை கொண்ட நாடு நோர்வேயாகும். யுத்தம் செய்யாமல், சத்தம் செய்யாமல் ஸ்வீடனில் இருந்து நோர்வே விடுதலை பெற்றது.

மேலும், நோர்வே சுவீடனிடமிருந்து விடுதலை பெற்றவுடன் முதலாவதாக செய்த வேலை சன சமூக நிலையங்களை நிறுவி தங்களுடைய மொழியை ஒரு குறுகிய காலப்பகுதிக்குள் கற்பிக்கப்பட்டதாகும். இதனால் தான் எங்களுடைய பிரதேசங்களிலும் இந்த சன சமூக நிலையங்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன.
இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற போது விடுதலைப்புலிகள் குறிப்பிட்ட இடங்களில் அறிவித்தல் பலகை நிறுவியிருந்தார்கள். அந்த அறிவித்தல் பலகையில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் நடைபெறுகின்ற விடயங்களை எழுதியிருந்தார்கள்.

மேலும், இன்று உலகத்தில் ஏற்பட்டிருக்கின்ற மிகப்பெரிய மாற்றமாக தொலைபேசியினுடைய பாவணை காணப்படுகின்ற போதிலும் அதற்குள்ளும் சன சமூக நிலையம் ஒன்றை அமைப்பது என்ற தீர்மானம் மிகவும் கொடையான ஒரு விடயமாகும்.
அத்துடன், பிள்ளைகளை வாசிக்க பழக்குவது மிகவும் கட்டாயமாகும். ஏனெனில் பிள்ளைகள் சமூக ஊடகங்களில் பல விடயங்களை அறிந்து கொள்கிறார்கள். ஆனால் எழுதச் சொன்னால் அவர்களால் எழுதமுடிவதில்லை. தற்போது கடிதம் கூட எழுதத் தெரியாத இளைஞர்கள் சமூகத்தில் இருக்கின்றனர்.
அந்த அளவுக்கு நாங்கள் வாசிப்பதும் இல்லை, எழுத்துக்களை திருத்தி படிப்பதும் இல்லை. ஆகவே இந்த சரஸ்வதி சன சமுக நிலையத்தை உருவாக்குவதன் மூலம் பிள்ளைகளை அதிகளவாக வாசிக்கத் தூண்ட வேண்டும் என்றார்.
ஜெலென்ஸ்கியை வறுத்தெடுத்தது போல் நடக்கலாம்: சார்லஸ் மன்னர் - ட்ரம்ப் சந்திப்பில் எழுந்த அச்சம் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புகழ் விசாலாட்சியா இது?... Frock போட்டு அவர் வெளியிட்ட போட்டோ Cineulagam