சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் தேசிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகத்திற்கு விஜயம்
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச பிரிவின் பிரதிநிதிகள் குழு மேற்கொண்டுள்ள அவதானிப்பு சுற்றுப் பயணத்தின் நிமித்தம் நேற்றைய தினம் (03) பிற்பகல் பத்தரமுல்ல, பெலவத்த மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான அலுவலகத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
இந்த பிரதிநிதிகள் குழுவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசப் பிரிவின் தகவல் மத்தியநிலைய பிரதி பணிப்பாளர் நாயகம் KANG Shuai பீஜிங் நகராட்சி குழு கட்சிப் பாடசாலையின் உதவிப் பேராசிரியர் JIANG Wen, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தகவல் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் ZHANG Guifeng ஆகியோரும் அடங்குகின்றனர்.
இயற்கை அனர்த்த நிலைமை குறித்து
இந்தப் பிரதிநிதிகள் முதலில் மஹரகமவில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் கொழும்பு மாவட்ட அலுவலகத்திற்கு வருகை தந்தவுடன், தற்போது முகம் கொடுத்து வருகின்ற இயற்கை அனர்த்த நிலைமை குறித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இச்சந்தர்ப்பத்தில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான தேவானந்த சுரவீர, லக்மாலி ஹேமச்சந்திர , மஹரகம மாநகரசபையின் முதல்வர் சமன் சமரகோன், துணை முதல்வர் ரஞ்சன் நாம்படுன்ன மற்றும் ஹோமாகம பிரதேச சபை தலைவர் கசுன் ரத்நாயக்க உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அதையடுத்து, மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான அலுவலகத்திற்கு வருகை தந்த சீன குழுவினர் தேசிய மக்கள் சக்தியின் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவுடன் கலந்துரையாடினர்.
மேலும் இலங்கையின் சீன கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகளால் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான அலுவலகத்திற்கு புத்தகங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
காயத்ரி விஷயத்தில் நிலா எடுத்த அதிரடி முடிவு, கடும் சோகத்தில் சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam